தோல்வியால் கண்ணீர் விட்டு கதறும் ரிசாத் பதியுதீன்! அதிர்ச்சியடைந்த தொண்டர்கள்

அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பெரும் சர்ச்சைக்குரிய நபராக மாறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைதாரிகளுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளார்.

ரிசாத்துக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெரும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள ரிசாத் பதியுதீன் ஊடாகங்கள் வாயிலாக கண்ணீர் விட்டு அழுத அனுதாபங்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அரச ஊடகம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற அரசியல் நேர்காணலில் கலந்து கொண்ட ரிசாத் பதியுதீன், ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இஸ்லாமிய மார்க்கம் அவமானங்களை சந்திப்பதாக தெரிவித்தார்.

தன்னை தொடர்ந்து பல்வேறு வழிகளில் தாக்குவதாகவும் தன்னால் தாங்க முடியவில்லை என்றும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இஸ்லாத்தை காக்க வந்த தூதனான தன்னை அடையாளப்படுத்தும் ரிசாத் பதியுதீன் கண்ணீர் விட்டழுதமை அவரின் தொண்டர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.