நாட்டைவிட்டு வெளியேறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

நாளையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தானிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

தஜிகிஸ்தானில் இடம்பெறவுள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.

குறித்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

3 நாட்கள் தஜிகிஸ்தானில் தங்கவுள்ள ஜனாதிபதி, மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடத்துவார் எனவும் கூறப்படுகின்றது .

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகிய நிலையில் இலங்கை அரசியலில் தற்போதும் பரபரப்பான சூழ்நிலையே நிலவுகிறது.

குறிப்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் மூலம் வெளிவரும் தகவல்கள் பெரும்பாலும் ஜனாதிபதிக்கு எதிராகவே அமைந்துள்ளன.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ள நிலையில், ஜனாதிபதியும் நாளை தஜிகிஸ்தான் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஸ்திரமற்ற நிலையில் நாடு எருக்கும்போது , நாட்டை விட்டு ஜனாதிபதியும் பிரதமரும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.