ஜனாதிபதிக்காக காத்திருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள்

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பதவிகளை மீளப்பெற உள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதென நேற்று தீர்மானித்திருந்தனர் .

இது தொடர்பில் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.