தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது!

சர்ச்சைக்குறிய எவன் கார்ட் சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமன் திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் எவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி சமன் திஸாநாயக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.