ஜனாதிபதியை தனியாக சந்திக்க கூட்டமைப்பு தீர்மானம்!

கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் கூட்டமைப்பினர் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து கோடிஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரையும் கலந்துகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கும் இந்த சந்திப்பில் பங்குபெற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றய தினம் கூட்டமைப்பினர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியமான சில உறுப்பினர்கள் வெளிப் பிரதேசங்களில் உள்ள காரணத்தினாலும் வேறு சில முக்கிய காரணங்களுக்காகவும் தாம் கலந்துகொள்ளவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.