விநாயகரை தேடி ஓடிய கோத்தா! பின்னால் ராஜபக்க்ஷர்கள்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியிலுள்ள மதஸ்தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

அந்தவகையில் இன்று கண்டிக்கு விஜயம் செய்த கோட்டா கட்டுக்கலை செல்வ விநாயகர் ஆயலத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் கோட்டாவுடன் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்துக்கோயில்கள் மட்டுமன்றி மீரா மக்கம் முஸ்லிம் பள்ளிவாயலுக்கும் அவர் சென்றுள்ளார்.

அங்கு மத வழிபாடுகளை நிறைவு செய்ததன் பின்னர் மஹிந்த ராஜபக்சஷ, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

மேலும் அஸ்கிரிய பீடத்திற்குச் சென்ற அவர்கள் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்த தேரரிரடமும் ஆசி பெற்றுக் கொண்ட பின்னர் , தலதா மாளிகை வளாகத்தில் கூடியிருந்த இளைஞர் யுவதிகளிடம் கலந்துரையாடிய கோட்டாபய, அவர்களின் வேலை வாய்ப்புக்கள் குறித்தும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

இதேவேளை விநாயகரை தரிசித்த கையோடு அவர் கதிர்காமத்திற்கு சென்று முருகனையும் வழிபட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.