தென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி! திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்

சஜித் பிரேமதாசவை ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த பின் , ரணிலை கட்சியை விட்டு விலக்கி, பிரதமர் பதவியை சஜித்துக்கு வழங்க ஜனாதிபதி மைத்ரிபால முயல்வதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதன் பின் ஐக்கிய தேசிய முன்னணியையும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்து, தேசிய அரசொன்றை உருவாக்க அவர் திட்டமிட்டுள்லதாகவும் தெரியவருகின்றது.

இதன் காரணமாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வேறு கட்சிகளுக்கு செல்ல உத்தேசித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்த முடியும் எனவும் மைத்ரி கருதுகின்றார்.

அதே சமயம் சஜித்துக்கு ஆதரவளிக்காதோருக்கு அமைச்சு பதவிகளை கொடுத்து தமது பக்கம் இழுக்க முடியும் எனவும் மைத்ரிபால கருதுவதாகவும் தெரிகிறது.

19ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேசிய அரசொன்று அமையுமானால் 48 கெபினட் அமைச்சர்களையும் ,45 பிரதி அமைச்சர்களையும் நியமிக்க முடியும்.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைவருக்கும் அமைச்சு பதவிகளை அளித்து , ஐ.தே.கட்சியில் முக்கிய பிரமுகர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதோடு , பின் பகுதி உறுப்பினர்களாக பதவிகளற்று இருப்போருக்கும் அமைச்சு பதவிகளை வழங்க அவர் தீர்மானித்துள்ளார்.

அத்துடன் இந்த அரசை கவிழ்த்து தனக்கு தேவையான அரசொன்றை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறைமறைவில் சதியொன்று தீட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.