யாரும் வாய் திறக்கக்கூடாது -ரணிலின் கடுமையான உத்தரவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் வாய் திறக்கக்கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றுமாலை இடம்பெற்ற இந்த கூட்டத்திலேயே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள விடயங்கள் தொடர்பில் மட்மே கலந்துரையாடுமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த , பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் சஜித் பிரேமதாஸாவின் ஆதரவாளர்களும் எதனையும் பேசாமல், மௌனமாய் இருந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.