யானை இல்லையென்றால் பருந்தில் பறக்க சஜித் திட்டம்!

சஜித் பிரேமதாசவை ஐ.தே.கட்சி ஜனாதிபதி வேட்பாளராக்காது போனால் பருந்து சின்னத்தில் அவர் களம் இறங்க பேச்சு வார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சஜித்தின் தந்தை ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வரவிருந்த அத்துலத் முதலி மற்றும் காமினி திசாநாயக்க ஆகியோர் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி எனும் கட்சியை ஐ.தே.கட்சிக்கு எதிராக பதிந்திருந்தனர்.

குறித்த முன்ணியின் தற்போதைய தலைவராக ஆரியவங்ச திசாநாயக்க உள்ளார்.

இந்நிலையில் அவரோடு சஜித்துக்கு நெருக்கமான சிலர் பேச்சு வார்த்தையில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை ராஜாங்க அமைச்சரான திலீப் வெத ஆரச்சி சஜித்துக்கு ஐ.தே.கட்சி ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக வர வாய்ப்பளிக்காது போனால் , பதிவு செய்யப்பட்ட வேறொரு கட்சியினூடாக அவரை வேட்பாளராக கொண்டு வர பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.