யாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ்ந்து இயங்குவதற்கு ஈழத்தமிழா் சுயாட்சி கழகம் தீா்மானித்துள்ளது.

இதனை அக்கட்சியின் செயலாளா் திருமதி அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளாா்.

மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் ஈழத்தமிழா் சுயாட்சி கழகத்திற்கும் இடையில் இன்று அறைக்குள் நீண்ட சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

அதன் பின்னா் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அனந்தி இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்துவந்த தாம் மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக ஐ.நாவில் குரல் கொடுக்க தீா்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்காக நான் மலையகத்தை சோ்ந்த மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கொள்ளை அடிப்படையில் சோ்ந்து பயணிக்க தீா்மானித்துள்ளதாகவும், அனந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன் ஊடாக மலையகமக்கள் அன்றாடம் எதிா்கொள்ளும் அன்றாட பிரச்சினைகளை ஐ.நாவில் மலையக மக்கள் சாா்பில் தாம் பேசவுள்ளதாகவும் அனந்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.