கோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எவ்வித தடைகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் தான் ஏற்கனவே அமெரிக்க குடியுரிமையை இழந்துள்ளதோடு , தற்போது இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சிலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் கோட்டா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.