சஜித்துக்கு பெறி வைத்த ரணில்! பந்து TNAயிடம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இரவு அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்காக சஜித் பிரேமதாசவுக்கு மட்டுமே பிரதமர் அழைப்பு விடுத்திருந்தபோதும் அழையா விருந்தாளிகளாக சஜித் குழுவின் கிளர்ச்சி தலைவர் மலிக் சமரவிக்ரம,கபீர் ஹசிம் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

இது குறித்து பிரதமர் சஜித்திடம் கேட்டபோது, தான் அவர்களை அழைக்கவில்லை என்றும் அவர்கள் தனியாக வந்துள்ளதாகவும், சஜித் கூறியுள்ளார்.

அத்துடன், ப்ரதமர் மறும் சஜித்திற்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கான ஒருங்கிணைப்பாளராக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவும் அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது ராஜித ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் புதிய கூட்டணியின் தலைவராகவும் 100% அரசியல் பிரமுகராகவும் இருக்க தகுதியானவர் என நம்புவதாக பிரதமர் சஜித்திடம் கூறியுள்ளார்.

இந்த கலைதுரையாடலில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக UNPக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் வலியுறுத்தியதோடு, நாட்டின் இரண்டு முக்கிய முகாம்களுகுக்கு அமைய வாக்குகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் யாராக இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் அவரால் வெல்ல முடியாது என்பதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுங்கள் என்றும், அதன் பின்னர் நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் நடத்துவோம் எனவும் இந்த வேலையை தொடர்ந்து ஒருங்கிணைக்க ராஜிதாவை பரிந்துரைப்பதாகவும் பிரதமர் கூறியபோது சஜித்தும் தனது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தன்னிடம் உள்ள அனைத்து ஆராய்ச்சி அறிக்கைகளையும் இன்று சமர்ப்பிப்பதாக பிரதமர் சஜித் பிரேமதாசவுக்கு உறுதியளித்துள்ளதுடன், அடுத்த நாளே அது தொடர்பாக கவனத்தில் கொண்டு விவாதிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ராஜிதவின் ஒருங்கிணைப்பிலான பேச்சுவார்த்தையை தொடர ஒப்புக்கொண்டதால் மிகவும் சுமுகமான முறையில் ரணில்-சஜித் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த சந்திப்பு நிறைவடைந்த பின்னர் வெவ்வேறு குழுக்கள் சஜித்தை காயாக வைத்துள்ளபோதும் சஜித் நல்ல மனிதர் என ரணில் விக்ரமசிங்க அங்கிருந்த நெருங்கிய நண்பர்களிடம் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.