பிரமருக்கு மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ள ஆணைக்குழு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளையதினம் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் நாளையதினம் தாம் ஆஜராக முடியாமை குறித்து பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி ஆணக்குழுவில் ஆஜராகுமாறு பிரதமருக்கு மீண்டும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.