பழைய பைல்களை தூசு தட்டும் ரணில் - பிரபலங்களை மாட்டிவிட திட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகாத நிலையில் பிரபலங்களின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி பிரபலங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் , ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் தொட்ர்பில் சகல தகவல்களும் கிடைத்துள்ளதாகவும் நேரம் வரும்போது, சகல தகவல்களையும் அம்பலப்படுத்துவேன் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.