சஜித்திடம் வெற்றிச் சூத்திரத்தை வெளிப்படுத்துமாறு கோரிய ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் இரவு அலரி மாளிகையில், சஜித் -ரணில் பேச்சு நடந்தது.

இதன் போது, சஜித்தின் வெற்றிச் சூத்திரத்தை வெளிப்படுத்துமாறு ரணில் கேட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதோடு ஐக்கிய தேசியக்கட்சி தனியாக வெற்றிபெற முடியாது, என கூறிய ரணில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறுவது அவசியம், அவர்களின் ஆதரவை பெற முடியுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் தமிழர் பிரச்சனை, மற்றும் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பாக சஜித் தனது கொள்கைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாசவிற்கும், ஐ.தே.கவின் கூட்டணி கட்சிகளிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ராஜிதவிடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.