சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக மார்ச் 12 இயக்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் சகல வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்று கூட்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன.

ஒரே மேடையில் சகல வேட்பாளர்களையும் கொண்டு வந்து பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பது இதன் பிரதான நோக்கம் என அவ்வியக்கத்தின் ஏற்பாட்டாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையினால் மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையிலான தொடர்பு பலமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இலங்கையின் அரசியல் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்ற நடவடிக்கையொன்று இதுவரையில் இலங்கை வரலாற்றில் இடம்பெறவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.