திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இன்று இணைந்துகொண்டார்.

அவர், தன்னுடைய நீண்ட நாள் காதலியான லிமினி வீரசிங்ஹவை கரம்பிடித்தார்.

கொழும்பு -02 கங்காராமை விஹாரையில் இடம்பெறும் விசேட வழிபாடுகளின் பின்னர், தங்கல்லையிலுள்ள கார்ல்டனின் திருமண வைபவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.