நாடு கடத்தப்படுவாரா அர்ஜுன் மஹேந்திரன்..?

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்காக சிங்கப்பூரிற்கு ஆவணங்கள் அனுப்பப்படிருந்தது.

இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த ஆவணங்கள் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.