மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற மனைவியுடன் சென்ற சஜித்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் அடுத்து , ஐ. தே. முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராஜ சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிறேமதாசவுடன் இன்று கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச, அங்கு இடம்பெற்ற பௌத்தமத அனுஷ்டானங்களில் கலந்துகொண்டதோடு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து சஜித் ஆசிபெற்றார்.

மேலும் மீரா மக்கம் முஸ்லிம் பள்ளிவாசலில் மதவழிபாட்டில் கலந்துகொண்ட அவர், கிறிஸ்தவ மதத்தலைவரான வியன் பர்னாந்துவை சந்தித்து ஆசிபெற்றதோடு , கடுகலே ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.