ஹிஸ்புல்லா தேர்தலில் களமிறங்க பெரமுனவின் முக்கியஸ்தரே காரணம்..!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்சவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டே , கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா எதிர்வரும் தேர்தலில் குதித்துள்ளதகாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஹிஸ்புல்லாவை களமிறக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து UNP ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு செல்கின்ற வாக்குகளை திசை திருப்புவதே பசிலின் முக்கிய நோக்கம் எனவும் தெரியவந்துள்ளது.

கிழக்கின் தேர்தல் பிரச்சாரத்தை ஹிஸ்புல்லாவிடம் பசில் ஒப்படைத்ததாகவும், மற்றொரு ‘டம்மி’ ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் ஜேவிபி எம்.பி., சிறிபால அமரசிங்க அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

கோட்டா ஆட்சிக்கு வந்தவுடன் கிழக்கு மாகாணத்தின் தனியார் பல்கலைக்கழகத்திற்கு அவர்கள் ஒப்புதல் அளிப்பார்கள் என்ற அடிப்படையில் ஹிஸ்புல்லாவை பசில் களமிற்க்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை , பல்கலைக்கழகத்திற்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த வென். அதுரலியே ரத்ன தேரர் கோதபய ராஜபக்ஷவை ஆதரிக்க முன்வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.