மீண்டும் குடும்ப ஆட்சி ஏற்பட்டால்...!சர்வாதிகாரம் தலைதூக்கும்

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்க்ஷ தேர்தலி வெற்றியீட்டினால் நாட்டில் மீண்டும் அராஜகம் தலை தூக்கி சர்வாதிகார ஆட்சி ஏற்படும் என சிங்கள முகநூல் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற சர்வாதிகார போக்கே அதற்கு உதாரணம் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அப்போது பேரணி ஊர்வலம் நடத்தியவர்கள் மீது கோட்டபாய தரப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதுடன், நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டிருந்த நிலமை மீண்டும் ஏற்படக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஆட்சி மாற்றத்தின் பின்னர் நீதிமன்றத்திற்கு சுதந்திரம் கிடைத்ததாகவும், நீதிபதிகள் மிகத் தெளிவான தீர்ப்புக்களையும் வழங்கியதாகவும் , அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.