சிவாஜிலிங்கத்திற்கும், அனந்திக்கும் பொலிஸ் பாதுகாப்பு

ஜனாதிபதி வேட்பாளா் சிவாஜிலிங்கத்திற்கும், அனந்தி சசிதரனுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு தோ் தல் ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த தேசப்பிாிய பொலிஸாருக்கு அறிவிறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதனடிப்படையில் குறித்த இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு, தேர்தலுக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவின் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் அடிப்படையில் அனந்தி சசிதரனுக்கும், சிவாஜிலிங்கத்திற்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தெகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.