களத்தில் மைத்திரி இல்லை ஆதலால் ஆதரவு கோத்தாவிற்கே- அங்கஜன் ராமநாதன்

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்காத காரணத்தினால் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கோத்தாவிற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என கூறியுள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.