அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அரசியல் சூழ்ச்சிகளும் தோல்வி - ஜீ. எல். பீறிஸ்

பொதுஜன பெரமுனவின் வெற்றியை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அரசியல் சூழ்ச்சிகளும் இன்று தோல்வியடைந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ. எல். பீறிஸ் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் முதல் கூட்டத்தில், கலந்துகொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெரமுனவின் வெற்றியை தடுப்பதற்காக அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னெடுத்த அனைத்து சூழ்ச்சிகளும் நீதித்துறையின் ஊடாகவே தோற்கடித்துள்ள்தாக கூறிய அவர், ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு அனைத்து தகுதிகளும் காணப்படுகின்றதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களுக்கே இனி மக்களாணையினை பெற முடியாது எனக்கூறிய பீரிஸ், 30வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த கோத்தாபய ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியதிகாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து தகைமைகளும் உண்ண்டென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோத்தபாயவிற்கு இனி எவ்வித தடைகளும் கிடையாது எனக்கூறிய அவர், வெற்றிப்பெறுவதே இறுதியாக காணப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.