இன்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம்

அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெறவிருந்த நிலையில், நடைபெறாத காரணத்தால் இன்று இரவு நடைபெறவுள்ளதாக அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் காரணமாக, அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.