ரணிலின் மிகபெரும் நம்பிக்கைக்கு உரியவரை தூக்கிய கோத்தபாய..!

ரணிலின் மிகபெரும் நம்பிக்கைக்கு உரியவரான முஸமில் கோத்தபாய ராஜபக்க்ஷவுடன் இணைந்துகொண்டுள்ளார்.

இன்று கண்டி உடுநுவர பகுதியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்க்ஷவினை ஆதரித்து முஸ்லிம் மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வென்று இடம்பெற்றது.

பாரிஸ் ஹாஜியார் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உருப்பினர் மஹிந்த ஆனந்த அலுத்கமகே, எஸ்.பி திசாநாயக மற்றும் முஸ்லிம் பொதுஜன பெரமுனவின் தலைவர் மில்பர் கபூர் ,மேல் மாகாண ஆளுனர் முஸம்மில் ,சட்டத்தரனி அலி சப்ரி மற்றும் மமாத்தளை மாவட்ட முஸ்லிம் அமைப்பாளர் மகீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண ஆளுநராக இருந்த அசாத்சாலி பதவி விலகியபோது அவருக்கு பதிலாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மிகவும் நம்பிக்கைகுரிய ஏ.ஜே.எம். முஸம்மில் மேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதன்காரணமாகவே கடந்த மாநகரசபை தேர்தலில் முஸமில் மனைவியான பெரோஸா முஸம்மிலும் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்க்ஷவினை ஆதரித்து இடம்பெற்ற ஒன்றுகூடலில் ஏ.ஜே.எம். முஸம்மில் இணைந்துகொண்டுள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.