தமிழ்க் கட்சிகள் தொடர்பில் கையை விரித்தார் சஜித்

தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 யோசனைகள் தொடர்பில் என்னால் இப்போது பதிலளிக்க முடியாது எனக்கூறிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் , ஆனால், தமிழ்க் கட்சிகளுடன் மனம்விட்டுப் பேசுவதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட 5 தமிழ்க் கட்சிகள் ஓரணியில் நின்று ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்களை சந்திப்பதற்கான ஏற்பாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனினும் அந்தக் கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள 13 யோசனைகளில் தொடர்பில் என்னால் இப்போதைக்குப் பதிலளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், அந்தக் கோரிக்கைகள் – யோசனைகள் இன்னமும் எம்மிடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவில்லைஎன்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, தமிழ்க் கட்சிகளும் எம்முடன் இன்னமும் பேச்சுக்களை நடத்தவில்லை எனதெரிவித்த சஜித் , அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் என்னால் உத்தியோகபூர்வமான கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.