பெரமுனவின் காடையர்களால் தாக்கப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்!

தமது வேட்பாளரின் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் அதிருப்தியில் ஆத்திரமடைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வன்முறைகளை நிகழ்த்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை வீரவில பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் அமில அபேகோன் என்பவரும் , மற்றும் அவரது தந்தை மற்றும் சகோதரர் மீது பெரமுனவின் வன்முறையாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் படுகாயமடைந்து தற்போது தங்காலை மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.