ஆதாரங்களை வெளியிட்ட ஹரின் பெர்ணாண்டோ..! கலக்கத்தில் மகிந்த அணி

மகிந்த அரசு சஹரான் உட்பட தீவிரவாத அமைப்புகளுக்கு சம்பளம் கொடுத்ததாக கூறிய அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ அதற்கான ஆதாரங்களை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றையதினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர் காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே அவர் குறித்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் ஈஸ்ட்டர் தாக்குதல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோதே அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ , மகிந்த ராஜபக்ச பௌத்த பிக்குகளிடம் தமது அரசு , ஈஸ்ட்டர் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு சம்பளம் கொடுத்து வந்ததை மறுக்க முடியாது என தெரிவிக்கும் வீடியோவை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதேவேளை மொட்டு கட்சியின் ஊடக பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெலவும் தனியார் தொலைக் காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சஹரான் குழுவினருக்கு தாங்கள் சம்பளம் கொடுத்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.