சம்பந்தன் மற்றும் மாவையின் கைப்பிள்ளை கோத்தபாயவிடம் ஓட்டம்

தமிழரசுக்கட்சியின் மிகநீண்டகால மூத்த உறுப்பினரும் முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவரும் கிழக்கின் எல்லைக்காவலன் என கூறப்படுபவருமான ஏகாம்பரம் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்முனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபட்ட அவர் ,தமிழர்கள் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால், ஆட்சியை மாற்ற வேண்டுமென்றும் தெரிவித்தள்ளார்.

இந்நிலையில் கோத்தபாவிற்கான அதமது ஆதரவு தொடர்பில் அவர் தெரிவிகையில்,

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சுதந்திரக்கட்சியும் ஒன்றுதான் ஜ.தே.கட்சியும் ஒன்றுதான். அதேபோல் மஹிந்தவும் சரி ரணிலும் சரி, இருவரும் ஒன்றுதான். அனைவரும் சிறுபான்மையினரைப் பிரித்து துரோகம் செய்து அடக்கிஆண்டவர்களே என தெரிவித்துள்ளார்.

எனினும் இன்றையநிலையில் தேர்தலை பகிஸ்கரிக்காது வாக்களிக்க வேண்டும் என்றும் கூறிய அவர், எனவே இந்த இருதரப்பில் ஓரளவாவது யார் நல்லவர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியது எமது கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக மோசமான பாதிப்புகளை விளைவித்த காலம் ஜ.தே.க யுகம் என்பது யாவரும் அறிந்த உண்மை என்றும், கறுப்பு ஜூலை கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பார்வையாளராக இருந்தமை இனங்களிடையே வன்முறைகளைத் தூண்டிவிட்டு பார்த்திருந்தமை தமிழ் இளைஞர்களின் கண்களைத் தோண்டி அராஜகம் செய்தமை 1990களில் கொளக்கொட்டியாவை அனுப்பி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களையும் தமிழர்பிரதேசங்களையும் கபளீகரம் செய்தமை உள்ளிட்ட பல அட்டூழியங்கள் நிகழ்த்தியது ஜ.தே.க எனவும் அவர் கூறியுள்ளார்.

அதோடு 1951களில் சமஸ்டியை தர எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க புறப்பட்டபோது பாதயாத்திரைசெய்து பண்டா-செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தவர் பிரதமரின் மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழர்களின் சாத்வீகப் போராட்டத்தை அடக்கிய முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச. மகனே இன்று மறுவடிவம் தாங்கிவருகிறார் என்றும், இதுவரை சிறுபான்மையினரை பாதுகாப்போம் என சொல்லவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழர் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் இந்த சமகால ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்றும், எனவே தனது பூரண ஆதரவு கோத்தாபாயவிற்கே வழகுவதாகவும்க் கூறிய அவர் ,தமிழ்மக்களும் அதனையே தெரிவு செய்ய வேண்டும் என்றும், இல்லாவிடில் இருண்ட யுகத்திற்கு செல்ல வேண்டி நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏகாம்பரம் தமிழ் அரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பந்தன் - மாவையின் வலம் இடம் செயற்பட்ட எல்லைக் காவலன் ஏகாம்பரம் கோத்தபாயவிடம் சரணடைந்தது தமிழரசுக்கட்சியின் அனைவரிடமும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தடன் மாவை சேனாதிராஜாவின் நம்பிக்கைக்குரியவராகவும் ரெலோ அமைப்பின் ஹென்றி மகேந்திரனின் உளவாளியாகவும் செயற்பட்டமை யாவரும் அறிந்தது ஆனால் தலைமைகள் அறியவில்லை என்பது தான் வேதனையான விடயம் அது தமிழரசுக்கட்சியின் அடி மட்டத் தொண்டன் யாரையும் கருத்தில் எடுக்காத தமிழசுக்கட்சிக்கு தக்க பதிலடி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றமை குறிப்பிடத் தக்கது.

இனி எல்லைக்காவலலும் இல்லை கல்முனையில்...