முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை உருவாக்கியது ராக்ஜபக்க்ஷர்களே!

நாட்டில் முஸ்லீம்களிற்கு எதிரான கலவரங்களை உருவாக்கியது ராக்ஜபக்க்ஷர்களே என்பது அம்பலமாகியுள்ளது.

மஹசோன் பலகாய" எனும் இனவாத அமைப்பின் தலைவன் அமித் வீரசிங்க , கண்டி - திகன கலவரத்தை முன்நிலையிலிருந்து நடாத்தியவன். அதன்பின்னர் அவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தான்.

இந்நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் 26ல் இடம்பெற்று 52 நாட்கள் நீடித்த அரசியல் சதியின் போது - சட்டவிரோதமாக பிரதமரான மஹிந்தவினால் அவசரமாக அமித் வீரசிங்க விடுவிக்கப்பட்டது நினைவிருக்கிறதா?

அப்போது அவரை காப்பாற்ற அப்படி என்ன தேவை மகிந்தவிற்கு ஏன் எழுந்தது? அன அவதானிகள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஆனால் தாமும் தமது அணியும் திகண கலவரத்தின் பின்னணியில் இருந்த விடயம் - விசாரணைகளில் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தினால் - சட்டவிரோத பிரதமரானதும் மகிந்த அவசரமாக விடுதலை அமித் வீரசிங்க செய்ய வைத்தார்.

அத்துடன் பொலிஸாரை நீதிமன்றத்தில் அமித் வீரசிங்கவை விடுதலை செய்வதில்லை மறுப்பில்லை எனக்கூறவைத்தெ மகிந்த அமித் வீரசிங்கவை விடுதலை செய்ய வைத்தார்.

அதன் பின்னர், இதே அமித் வீரசிங்கவை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற இனக்கலவரங்கள் தொடர்பாகவும் கைது செய்யப்பட்டபோதும் , முஸ்லிம்கள் அடையாள அணி வகுப்பில் அவனை காட்ட அஞ்சியதால் தப்பித்துக்கொண்டான்.

மகிந்த சட்டவிரோதமாக பிரதமரானதும் இவ்வாறான ஒருவனை அவசரமாக முக்கியத்துவம் கொடுத்து விடுதலை செய்யுமளவு இவன் முக்கியத்துவம் என்ன? இவனுக்கும் மகிந்தவிற்குமிடையிலான தொடர்பு என்ன? என்பதுதான் பலருக்கும் புரியாத புதிராக இருந்தது.

இதேவேளை மகிந்த அணியின் முஸ்லிம் விரோத செயலணியின் முக்கிய தளபதியே இந்த அமித் வீரசிங்க என்பதனால் தான் மகிந்த அவரை விட்டுக்கொடுக்க மாட்டார் என்றும் முஸ்லிம்களை அழிக்க மகிந்த அணிக்கு அமித் வீரசிங்க மிக அவசியமானவன் எனவும் விடயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் அமித் வீரசிங்கவை வைத்து இன்னும் பல அழிவுகளை மகிந்த அணி செய்ய வேண்டி இருக்கிறதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் மகிந்த அணியின் முஸ்லீம்கள் மீதான இனவாத கோர முகத்தை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளட்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.