இலங்கையில் இதுவரை இல்லாத பிரமாண்ட கட்டடம் - இன்று திறப்புவிழா

இலங்கையில் இதுவரை இல்லாத பிரமாண்ட கட்டடம் ஒன்று நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை முப்படைகளிற்காக கட்டப்பட்ட குறித்த கட்டடம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இராணுவம், கடற்படை மற்றும் விமான படை ஆகிய முப்படை பிரிவுகளின் தலைமையகங்களை ஒரே இடத்தில் அமைக்கும் நோக்கில் பெலவத்த அக்குரேங்கொட பகுதியில் இந்த கட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

77 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு மற்றும் முப்படை தலைமையகத்திற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி அடிகல் நாட்டப்பட்ட நிலையில் இன்று திறந்துவைக்கபடவுள்ளது.

அத்துடன் இதற்காக 53.3 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை இலங்கையில் அமைக்கப்பட்ட பாரிய கட்டட வேலைத்திட்டமாகவும் இது கருதப்படுகின்றது.

அதிநவீன தொழினுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் நவீன பாதுகாப்பு முறைமையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.