மொட்டை வெட்டிய கருணா

விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா நேற்றையதினம் தனது 54வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் தான் எல்லோருக்குமே மரியாதை .

அந்தவகையில் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா இருந்தபோது புகழ்பூத்த தளபதியாக அவர் இருந்தார்.

ஆனால் , இன்று அவர் ஒரு அரசியல் நகைச்சுவையாளராக கருதப்படுகிறார்.

அவரது பேச்சுக்கள் ஒவ்வொன்றும் மீம் கிரியேட்டர்களிற்கு அல்வாத் துண்டுகளாக சிக்கிக் கொண்டிருப்பதால், அவரின் பிறந்த நாளிலும் மீம் கிரியேட்டர்களின் செல்லப்பிள்ளையாக கருணா இருக்கிறார் .

இந்நிலையில் தனது வாயைத்திறந்தாலே ராஜபக்ச சகோதரர்களின் புகழ்பாடும் கருணா என்ற முரளிதரன், அவரது பிறந்தநாளிற்கு வெட்டிய கேக்கிலும் மொட்டின் உருவத்தினை வரைதிருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.