வடக்கு கிழக்கில் சூறாவளி பிரசாரத்தில் சஜித்! இன்று பிற்பகல் யாழ் கிட்டு பூங்காவில்

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் சூறாவளி பிர­சா­ர­த்தில் ஈடு­ப­ட­வுள்ளார்.

இன்று வட பகு­திக்கு விஜயம் செய்யும் அவர், நாளைய தினம் கிழக்கில் பல பகு­தி­க­ளிலும் பிர­சா­ரக்­கூட்­டங்­களை நடத்­த­வுள்ளார்.

இன்று காலை மன்­னாரில் இடம்­பெறும் பிர­சா­ரக்­கூட்­டத்தில் பங்­கேற்கும் சஜித் பிரே­ம­தாச, அத­னை தொடர்ந்து கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் ஆகிய இடங்­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள கூட்­டங்­க­ளிலும் கலந்­து­கொள்ளவுள்ளார்.

நாளை சனிக்­கி­ழமை அம்­பாறை மாவட்­டத்­திற்கு விஜயம் செய்­யும் அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அட்­டா­ளைச்­சேனை, கல்­முனை மற்றும் பொத்­துவில் ஆகிய பிர­தே­சங்­களில் இடம்­பெ­ற­வுள்ள தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் கலந்து கொள்­ள­வுள்ளார்.

வடக்கு கிழக்கில் இடம்­பெறும் பிர­சா­ர­கூட்­டங்­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் மற்றும் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பிர­தேச சபை­களின் தவி­சா­ளர்கள் என பலரும் கலந்து கொள்­ள­வுள்­னனர்.

அட்­டா­ளைச்­சே­னையில் நடை­பெ­ற­வுள்ள பிர­சார பொதுக்­கூட்டம் அஷ்ரப் ஞாப­கார்த்த பொது விளை­யாட்டு மைதா­னத்தில் இடம்­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

அத்துடன் கூட்­டத்­துக்­கான ஏற்­பா­டு­களை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் , முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மத்திய குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு ( கிட்டுப்பூங்கா ) வில் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறும் வெற்றிக் கூட்டத்தை தொடர்ந்து, தென்னிந்திய இசை கலைஞர்களான நிக்கல் மெத்தியு, அனிருத், சுகன்னியா, ஸ்ரீசா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றும் அங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.