மீண்டும் இருண்டயுகம் வேணுமா? சிந்திப்பீர் வாக்களிப்பீர் - இலங்கை தமிழரசுக்கட்சி

இன்று கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றி கதைப்பவர்கள் இதற்கு முன் அவர்களது குடும்பம் ஆட்சி செய்த 10 வருடத்தில் என்ன செய்தவர்கள் என்று சித்தித்தீர்களா? ஏன் அந்த நேரத்தில் இப்ப கூறுவதை செய்யவில்லை என திருகோண்மலை இலங்கை தமிழரசுக்கட்சி கூறியுள்ளது.

அத்துடன் ,

1.சம்பூர் மக்களை அகதிகளாக்கி அவர்களது சொந்த நிலத்தை கடற்படை பயிற்சி முகாமாகவும் அனல் மின் நிலைத்திற்கும் வழங்கியதை மக்கள் மறக்கவில்லை.

2. இளைஞர்களை தேடி தேடி பிடித்து 4 ம் மாடிக்கும் புனர்வாழ்வு என்ற பெயரில் செய்த கொடுமைகளையும் மக்கள் மறக்கவில்லை.

3. எமது இளைஞர்களின் சுதந்திர வாழ்வை கேள்விக்குட்படுத்தி வேற்று நாட்டு மக்கள் போல் நடத்தியதை எமது மக்கள் மறக்கவில்லை.

4.எமது தமிழர்களின் காணிகளை பாதுகாப்புக்கென்ற பெயரில் அரசவர்த்தமானி அறிவித்தல் மூலம் 0 zone ஆக்கி பறிப்பதற்காக திட்டமிட்டு செயற்பட்டதை மறக்கவில்லை.

5.எமது ஊடகவியலாளர்கள் சுகிர்தராஜன், நிமலராஜன், தராகி சிவராம், நடராசன் போன்றவர்களை உயிரோடு இல்லாமல் ஆக்கியதை மறக்கவில்லை.

6. கப்பத்திற்காகவும் தனிப்பட்ட விரோதங்களுக்காகவும் கடத்திச்செல்லப்பட்ட பிஞ்சு மாணவிகள் யூட்வர்ஷா, சதிஸ்குமார் தினுஷிகா, அப்பாவி இளைஞன் பிரஷாத் போன்றவர்களை கொடுமை செய்து பூமியில் வாழவிடாமல் செய்த கொலைகளை நடந்த கொடுமைகளை மறக்கவில்லை அந்த படுபயங்கர யுகம் வேண்டாம்.

7.எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், அரியநாயகம் சந்திரநேரு, மற்றும் விக்கேனஸ்வரன் அண்ணன் ஆகியோர் படு கொலை செய்யப்பட்ட யுகத்தை மறக்கவுமில்லை விரும்பவுமில்லை.

8. மக்களின் வயிற்றலடித்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கூட்டி விற்று கொள்ளையடித்ததை மறக்கமுடியவில்லை. உதாரணம் கேஸ் அன்று2590/- விற்றீர்கள் நல்லாட்சில் இன்று 1600/- தான் உண்மையான விலை பெற்றோல் அன்று 169/- இன்று 139/- தான் உண்மை விலை.

9. தமிழர்களுக்கெதிராக தாக்குதல்களை நடத்துவதற்கு சஹ்ரான் எனும் பயங்கரவாதிக்கு சம்பளம் கொடுத்து வளரத்து இன்று உங்கள் அரசியல் இலாபத்திற்காக மக்களை அழித்ததை மறக்கவில்லை மண்ணிக்கவும் மாட்டோம்.

10.திருக்கோணேஸ்வர புனித பூமியில் சிங்கள காடையர்களை கடைபோட்டு குடியேற்றி அசுத்தப்படுத்தியதை மறக்க மாட்டோம்.

11.கன்னியாவை பட்டனமும் சூழலும் பிரதேச சபையிடமிருந்து பறித்து தொல்லியல் துறையிடம் கொடுத்து சிங்கள மயமாக்கியதை மறக்க மாட்டோம்

12. உங்கள் ஊரின் சகல வீதிகளையும் கார்பெற் வீதிகளாக மாற்றியதையும் தமிழர்கள் வாழும் இடங்களிலுள்ள வீதிகளை சேறும் சகதிகளாக விட்டுவைத்ததை மறக்கவில்லை.

இப்படியான உங்களுக்கு எமது நாட்டு மக்கள் வாக்களித்தால் நாளை உங்கள் அரசியல் இருப்புக்காக எங்களை தங்கள் செருப்பாக நினைத்து மொத்தமாக அழிக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் என கேள்வி எழுபியுள்ள திருகோணமலை இலங்கை தமிழரசு கட்சி

தற்போது இருக்கின்றவர்களில் வெல்லக்கூடிய வேட்பாளர்களில் எமது தமிழ் மக்களை பாதுகாக்க கூடியவராக தெரியும் சஜித் பிரேமதாசாவுக்கு கட்டாயம் 100% நாம் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒருவேளை சஜித்திற்கு வாக்களிக்காது விட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்குல் நாம் தள்ளப்படுவோம் என்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது.

1) தமிழர்களின் பொருளாதாரம் நசுக்கப்படும்

2) நமது இளைஞர்கள் குழந்தைகள் கப்பத்திற்காக காணமல் ஆக்கப்படலாம்.

3) சுதந்திரம் பறிக்கப்படும்

4) இரண்டாம் பிரஜைகளாப்படுவோம்.

5) மெது மெதுவாக நாட்டைவிட்டு வெளியேற்ற நிர்ப்பந்திக்கப்படுவோம்.

6) தமிழரின் காணிகள் அபிவிருத்தி என்ற பெயரில் வர்த்தமானி மூலம் பறிக்கப்படும்.

7) தமிழர்கள் வாழ்ந்த தடமும் வரலாறும் அழிக்கப்படும்.

8) கோயில்கள் தொல்பொருளியல் திணைக்களத்தின் மூலம் சுவீகரிக்கப்படும்.

இதைதடுக்க ஒரே வழி அவர்களுக்கெதிராக வெற்றிபெறக்கூடிய வேற்பாளரான சஜித் பிரேமதாசவிக்கு கட்டாயம் வாக்களித்தே ஆகவேண்டும் என்றும், இதுகாலத்தின் கட்டாயம் எனவும் கூறியுள்ள இலங்கை தமிழரசு கட்சி மக்களின் நிம்மதியான இருப்பே எமது விருப்பு என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழரசு கட்சி