வடக்கு கிழக்கில் ராஜபக்க்ஷர்களின் குள்ளநரித்தனம்!

சஜித் பிரேமதாச 17, 18ம் திகதி சஜித் பிரேமதாச இந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பது நிச்சயமான ஒன்று என அமைச்சர் மனோ கணேசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் வடக்கு, கிழக்கில் ராஜபக்ச பட்டாளம், தந்திரமான செயற்பாட்டை முன்னெடுக்கின்றதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.

அவர்கள் வடக்கு கிழக்கு மக்களிடம் எமக்கு வாக்களிக்காது விட்டால் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களியுங்கள். இல்லை சஜித் அல்லாத எவருக்கும் வாக்களியுங்கள் என்கின்றனர். இதுதான் அவர்களது குள்ளநரி தந்திரம் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்