புதிய இராணுவத் தலைமையகத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி

இலங்கையில் பிரமாண்டமாக பெல்வத்தவில் அமைக்கப்பட்ட புதிய இராணுவத் தலைமையகத்தை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி இதுவரை காலமும் நிரந்தரமான கட்டிடடம் இல்லாமல் வாடகை இடங்களில் இராணுவத் தலைமையகத்தை இயக்குவதற்கு மாதாந்தம் 42 மில்லியன் ரூபாவை செலவிட்டிருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடந்த 2011ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் 53.3 பில்லியன் மதிப்புள்ளது என்றும் , கட்டுமானத்தின்போது, திறைசேரியிலிருந்து நிதியை விடுவிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் குறித்த கட்டடம் அமைக்க தாமதமானதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கட்டடத்தில் கடற்படை மற்றும் விமானப்படையின் தலைமையகங்களும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும். என்க்கூறிய ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை தனிநபர்களின் தவறுகளை தவிர்த்திருந்தால் பெரும் சோகத்தை தவிர்த்திருக்கலாமெனவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.