குதிரை வண்டிலில் யாழில் சஜித் அசத்தல் பிரச்சாரம்

எதிர்வரும் 16 ஆம் திகதில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரச்சாரங்களை பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திற்கு இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த சஜித் பிரேமதாசவை குதிரை வண்டிலில் உட்கார வைத்து ஊர்வலமாக ஐ.தே.க ஆதரவாளர்கள் அழைத்து சென்றனர் .

யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக அங்கு சஜித் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இதன்போது மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமளவான ஐ.தே.க அதரவாளர்களும் ஊர்வலமாக சஜித்துடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.