சம்பந்தன் - சிவாஜிலிங்கம் எதிர்பாராத திடீர் சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுஜேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள எம்.கே சிவாஜிலிங்கம் இன்று தனது தேர்தல் பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலை பிரகடனம் எனும் பெயரில் இன்றையதினம் திருகோணமலையில் அவர் அதனை வெளியிட்டுள்ளார்.

அதன் பிரதிகளை அவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரையும் சந்தித்து கையளித்துள்ள நிலையில் சம்பந்தரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் திருகோணமலை தென் கைலை ஆதீன குருக்களையும் இதன்போது சந்தித்த சிவாஜிலிங்கம் பிரகடத்தை அவரிடம் கையளித்ததோடு ,திருகோணமலை காளி கோவில் குருக்களிடமும் கையளித்துள்ளார்.

மேலும் இதன்போது அனந்தி சசிதரனும் அவருடன் சென்றிருந்தார்.

இதேவேளை எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு பகிரங்கமாக ஆதரவளித்துள்ள நிலையில் இரா சம்பந்தரை சிவாஜிலிங்கம் சத்தித்திருந்தமை பலராலும் பரவலாகப் பேசப்படுகின்றது.