வெளிநாட்டுகளில் இருந்து 2லட்சம் வாக்காளர்கள் இறக்குமதி!

வெளிநாடுகளில் இருந்து 2லட்சம் வாக்காளர்களை இலங்கைக்கு வரவழைக்கும் பெரமுனவின் கட்சியின் ஏட்பாடுகள் வெற்றிகரமாக நகர்ந்துகொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் 4.5 லட்சம் வாக்குகளால் தோல்வி அடைந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி அரசின் இயலாமை நமது மக்கள் ஆதரவை பெருக்கியுள்ள போதிலும் அதனை அலட்சியமாக விட்டுவிட கூடாது என்பதற்காக 2லட்சம் வெளிநாட்டுவாழ் கட்சி உறுப்பினர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாக்காளர்களை வரவழைக்க பசில் ராஜபக்ச ஏர்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் 2லட்சம் பேர் கட்சியினூடாக பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொகையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை வந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றும் நாளையும் மிகுதியானவர்களும் வந்துவிடுவார்கள் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.