ஜனாதிபதி மாளிகையைவிட்டு வெளியேறும் மைத்திரி!

நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்க்ஷ பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மாளிகையை விட்டு இன்று வெளியேறவுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரி ஏற்கவுள்ளதாக சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்தமையினால், சுதந்திர கட்சியின் பதில் தலைவராக லக்ஷ்மன் பியதாஸ செயற்பட்டு வருகின்றார்.

அதற்கமைய மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.