கோத்தாபாயவுடன் முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்டும்!

நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்க்ஷ பதவியேற்றுள்ள அவர்க்கும் பரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோட்டபாய ராஜபக்க்ஷவுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளது.

அத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமாதானம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடனும், அரசாங்கத்துடனும் முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்டும் எனவும் உலமா வலியுறுத்தியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துத் தெரிவித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.