கோத்தபாயவை சந்தித்த முதல் வெளிநாட்டு தூதுவர்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று மாலை கோத்தபாய ராஜபக்க்ஷவை சென்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நுகேகோட மீரிஹானவில் உள்ள கோத்தபாயவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்திய தூதுவருடனான சந்திப்பிக் முக்கியத்துவம் என்ன என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கோத்தாபய ராஜபக்ச, சாதாரணமாக சந்தித்தேன் என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்தியா, சீனாவுடனான உறவுகளுக்கு இலங்கை எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவும் சீனாவும், எமது அயல் நாடுகள், எப்போதும் எமது நீண்டகால நண்பர்களாகவும் அவர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இருவரில் யாருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பீர்கள் என மீண்டும் ஊடகங்கள் அவரிடம் கேளிவி எழுப்பியபோது , இரண்டுமே முக்கியமானவைதான் என கூறிய அவர் ,ஆனால் இந்தியா எமது அயல் நாடு என பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.