புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் கூட்டமைப்பு பரிசீலனை

எதிர்காலத்தில் அரசா இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அது குறித்து பரிசீலிப்போம் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

அத்துடன் தீர்வு வரும்வரை அரசில் இணைவதில்லையென கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த நிலைப்பாட்டை சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தபோதும், கடந்த ஒரு மாதமாக தமிழ் அரசு கட்சிக்குள் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.