மொட்டில் மலர்ந்த முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாள்!

இன்றையதினம் இலங்கையின் 7 வது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்க்ஷ பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

பெரமுன கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பளராக களமிறங்கிய கோத்தபாய வெற்றி பெற்றதை அடுத்து இன்றையதினம் அவரின் சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்க்ஷவின் பிறந்ததினமான இன்று அவர் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்க்ஷ தனது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் கொண்டாடியுள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்க்ஷவின் பிறந்தநாள் கேக்கானது தாமரை மொட்டுகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.