கோத்தபாயவினால் வழங்கப்பட்ட முதல் நியமனம் -பிரபாகரனை பாராட்டியவருக்கு!

இன்றையதினம் நாட்டின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷவினால் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக கமால் குணரத்னவிற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் இடம்பெற்ற இறுதிப் போரில், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன 53 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

இறுதி கட்ட போரின்போது மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் தலைமையில் செயற்பட்ட படைப்பிரிவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முனவைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அவர் எழுதிய, நந்திக்கடலுக்கான பாதை நூல் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமானது.

அந்த புத்தகத்தில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறுதி, நடத்தையை பாராட்டியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.