புதிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட முக்கியமான நால்வர்!

நாட்டின் 7வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

தமது கடமைகளை பொறுப்பேற்ற அவர் தொடர்ந்து முக்கிய நான்கு நியமனங்களை வழங்கினார்.

அந்தவகையில் ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவராக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.