ஐ.தே.கவின் 25 மேற்பட்டவர்கள் மகிந்தவுடன் இணைவு

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 இற்கும் மேற்பட்டவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதிலும், இறுதி முடிவெதுவும் எட்டப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நாளை, நடைபெற உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம் மற்றும் ஆளும் கட்சி எம்.பிகளின் கூட்டங்களின் பின்னர் இறுதி முடிவை எட்டுவதற்கு இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.