ஜனாதிபதி கோட்டபாயவின் மற்றுமொரு அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் அரச ஊழியர்கள்

அரச உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளுக்கு பயணமாவதை இடைநிறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர பணித்துள்ளார்.

இதனை நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் அறிவுறுத்தியகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாண ஆளுநரின் செயலாளர்களுக்கு இந்தப் பணிப்புரை ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவித்தல் வரை இந்தப் பணிப்புரை நடைமுறையில் இருக்கும் எனக் கூறியுள்ள ஜனாதிபதியின் செயலாளர், செயலாளர்கள் தமக்குக் கீழ் வரும் பணித்துறையினருக்கு இந்த பணிப்புரையை நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.