9 வருடங்களின் பின்னர் அமைச்சிலிருந்து வெளியேறிய ரிஷாத் !

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாத் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிலிருந்து இன்று வெளியேறியுள்ளார்.

சுமார் 9 வருடங்களின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக சற்றுமுன்னர் அவர் அறிவித்திருந்தார்.

அமைச்சில் இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பில் ரிஷாத் இதனை அறிவித்ததோடு அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.